Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

#image_title

கந்தன் கருணை 1967 ஆம் ஆண்டு சிவகுமாரின் அற்புதமான நடிப்பால் வெளியானது. ஜெயலலிதா, கே ஆர் விஜயா ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள்.

 

ஆறுபடை வீடு அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார்கள். இப்படி சுவாமி மலைக்குச் சென்றார் ? எப்படி பழனியை ஆண்டார்?  திருச்செந்தூரில் எப்படி ஐக்கியமானார் என அனைத்து விதமான முருகனின் அறுபடை வீடுகளை பற்றி மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் அந்த படம் அமைந்துள்ளது.

 

முருகனின் வீரத்தில் வியந்து இந்திரனே தனது மகளை மணக்க சொல்லி கேட்ட முருகன் மணந்தவர் தான் தெய்வானை. அதே போல் குறவ குலத்தில் முருகனை நினைத்து வாழும் ஒரு குறவ பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் அவர்தான் வள்ளி.

 

கந்தன் கருணையில் வரும் பாடல்கள் இன்றளவும் கோயில்களில் ஒழிக்கப்பட்டிருக்கிறது அந்த அளவிற்கு இசை அமைந்துள்ளது. கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார் , இதற்காக அவர் சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார் .”திருப்பரங்குன்றத்தில் நீ” பாடல் குன்னக்குடி வைத்தியநாதனால் இயற்றப்பட்டது . “அறுபடை வீடு” பாடல் ஒரு ராகமாலிகா .

சொல்ல சொல்ல இனிக்குதடா ” பாடல் குந்தலவரலி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த கந்தன் கருணை படத்தில் சிவக்குமார் முதல் சாய்ஸ் இல்லையாம்.  முதல் சாய்ஸாக இருந்தவர் குணச்சித்திர நடிகர் விஜயகுமார்.

 

நாடக வாழ்க்கை மூலம் தனது நடிப்புத்திறனை வளர்த்த அவர்,  நான் நடிக்கப் போகிறேன் என்று அவர் வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி வந்தவர் தான் விஜயகுமார்.

 

கதாசிரியர் பாலமுருகன் குழுவில் சேர்ந்து அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி இருந்த பொழுது அவரைப் பார்த்த ஒரு தயாரிப்பாளர் கந்தன் கருணை படத்திற்கு இவரைத்தான் முதலில் நியமிதார்களாம். அவருக்கு கண்கள் மிகவும் குறுகியது முருகனுக்கு கண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் அதனால் இவருக்கு இந்த வாய்ப்பு போயிருக்கிறது. அதனால் வாய்ப்பு சிவகுமாருக்கு சென்றதாம்.

 

அதன் பிறகு மனதை தவிர விடாமல் எப்படியோ மாபெரும் பழம் பெரும் இயக்குனரான மாதவன் ஒரு நாடகத்தை எடுக்கிறார் என்ற கேள்விப்பட்ட அங்கு சென்று அதில் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் அவர் இடம் பெற்றார்.

Exit mobile version