பொதுவாக வெவ்வேறு நாகரிகங்களில் வாழும் மக்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் வினோதமாக தெரியும்.
ஆனால் பொதுவில் சீனர்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்கள் பார்வைக்கு படுபயங்கரமாக தோன்றும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நண்டு மீன் பாம்பு போன்றவற்றை மட்டும் வகைவகையாக உண்பதில்லை. சைவ உணவுகளையும் உண்கிறார்கள்.
சீனாவில் பொதுவாகவே உணவை வேக வைத்தே சாப்பிடுகின்றனர். கொஞ்சமே கொஞ்சம் அரிசியை மட்டும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நிறைய கறியையும், காய்கறிகளையும் எடுத்து உண்கின்றனர். காரத்திற்கு வினிகரில் கொஞ்சம் சிவப்பு மிளகாய் போட்டு வைத்து இருப்பதை ஒரு வாய் வைத்துக்கொள்கின்றனர். கடல் உணவுகளை பற்றி எழுதினால் நான்கு நாட்கள் தேவைப்படும்…. பிஞ்சு நண்டு, ஆக்டோபஸ், பெரியத்தில் இருந்து சிறிய மீன், சிப்பி என்று எல்லாவற்றையும் ருசித்து சாப்பிடுகின்றனர்.
கடல் பாம்புகளை தோலை மட்டும் உரித்து விட்டு அப்படியே தீயில் வாட்டி சாப்பிடுகிறார்கள். செம்மறி ஆட்டின் ஆணுறுப்பை சுட்டு சாப்பிடுகிறார்கள் பாலியல் குறைபாடுகளை சரி செய்யும் என்ற நம்பிக்கையில் (முறையான ஆதாரம் இல்லை)
இது மாட்டு கால்களை வைத்து செய்யப்படும் பீப் லெக் பீஸ்.
மேலே உள்ளது நாம் சாப்பிடும் ஃபேமிலி ரோஸ்ட் போல முழுமையான நாய்கறி. நாய்க்கறி நம் நாகலாந்து மாநிலத்திலும் சாப்பிடப்பட்டாலும் சீனாவில் ஆண்டு தோறும் dog meat festival என்று கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகும் சர்ச்சைக்குரிய திருவிழாவின் போது விதவிதமான முறைகளில் நாய் இறைச்சி சாப்பிடுகின்றனர்.
ஏதோ பெரிய அளவிலான காளான்களை போல மேலே உள்ளது என்னவென்றால், ஆட்டின் ஆண்குறி தோல் நீக்கப்பட்ட வெள்ளை பாம்புகள் கடல் குதிரைகள் பல வகையான மீன்கள் சில கடல் பாசிகள் காளான்கள் பறவைகளின் முட்டைகள்(முட்டை ஓடுகளுடனும் சில ஓடுகள் இல்லாமலும்) என பல சைவ அசைவ வகைகளை பலவிதமான சீனப் பாரம்பரிய மசாலாக்கள் கலந்து செய்யப்படும் ஒரு விதமான உணவு.
விதவிதமாக ஆழ்கடலில் ஜெல்லிகளை பிடித்து கண் கவரும் வகையில் உணவுகளாக சமைக்கிறார்கள்.
இது சீனாவில் புகழ்பெற்ற சைவ உணவு அன்னாசிப்பழத்தை வைத்து செய்யப்படும் கேசரி போன்ற ஒரு உணவு.
சீனாவிலேயே உருவாக்கப்படும் தனித்தன்மையான சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் வகைகள்.