தமிழ் சினிமாவில் தனது புது விதமான வில்லத்தனத்தின் மூலம் புகழ் பெற்றவர் செந்தாமரை. மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார் செந்தாமரை,.
நமக்கு அவ்வளவு வெறுப்பு அவர் மேல் இருக்கும். எத்தனையோ படங்களில் நடித்து வில்லத்தனத்திற்கு இவர் தான் ஒரு மறுபிறவி முரடன் போல் இருப்பார்.
கலைஞரின் நாடக மன்றத்திலிருந்து ஒரு லெட்டர் வாங்கிக் கொண்டு எம்ஜிஆரின் நாடக மன்றத்தில் சேர்ந்தார் செந்தாமரை.
இவர் பார்ப்பதற்கு முரடன் போல் இருப்பதால் நிறைய நடிகைகள் இவருடன் நடிக்க மறுத்துள்ளனர்.
அதன் பிறகு எம்ஜிஆர் அவர்களிடம் லெட்டரை எல்லாம் காமித்து அதன் பிறகு தான் பயம் இல்லாமல் நடியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
இவர் பிரபல டான்சரும், திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நடிகை கௌசல்யாவை திருமணம் செய்துகொண்டார். சிறுவயதிலேயே எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்துள்ளவர், பல படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் நாடக மன்றம் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்த கௌசல்யா தனக்கு வேலை இல்லை என்று எம்.ஜி.ஆரிடம் கூற அவர் தான் நடிக்கும் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.இப்பொழுது ஒரு சில நாடகங்களில் பாட்டியாகவும் அன்னையாகவும் நடித்து வருகிறார்.
எம்ஜிஆரை பற்றி கேட்டபோது, இது குறித்து அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் இருந்ததாலே என்னவோ எதுவுமே எனக்கு பிரமிப்பாக இருந்ததில்லை. நம்ம வேலையை நாம் செய்கிறோம் என்ற நினைப்புதான் வந்தது. அதேபோல் எம்.ஜி.ஆரை பார்த்தும் எனக்கு வியப்பு வந்ததில்லை. நான் அவருடனும் அவரது அண்ணன் பசங்களுடனும் விளையாடி இருக்கிறேன். ஒரு அண்ணனை போல் இருப்பார்.
சிறு வயது முதல் ஒன்றாக இருந்ததாலே என்னவோ அவரை பார்த்து எனக்கு வியப்பு வந்ததில்லை என்று நடிகை கௌசல்யா கூறியுள்ளார்.