காளிகாம்பாள் கோயிலில் திகைத்து நின்று டிஎம்எஸ்! “உள்ளம் உருகுதய்யா” பாடல் உருவான கதை

0
312
#image_title

உள்ளம் உருகுதையா என்ற பாடலுக்கு உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த பாடலை கண் மூடி கேட்கும் பொழுது உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு முருகனை நம் நேரில் நிற்க வைக்கும். அந்த அளவுக்கு அந்தப் பாடலைக் கேட்டால் உருகும்.

 

இப்படி இந்தப் பாடலை எழுதியவர்கள் யார் என்று யாருக்குமே தெரியாது நிலை இருந்துள்ளது.

 

ஒருநாள் பழனிக்குச் சென்று இருந்த டிஎம்எஸ் தங்கும் விடுதியில் தங்கி இருந்தாராம். அப்பொழுது ஒரு முஸ்லிம் சிறுவன் இந்த உள்ளம் உருகுதடா முருகா என்று பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தானாம்.

 

பாடலில் இருக்கும் பொருளையும் இசையும் கண்டு மயங்கிப் போன டி எம் எஸ், அவனைக் கூப்பிட்டு இந்தப் பாடல் எப்படி உனக்கு தெரியும் , என்று கேட்க விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

 

உள்ளம் உருகுதடா டா க்கு பதிலாக ஐயா என்று மாற்றி டி எம் எஸ் பாடலை பதிவு செய்து விடுகிறார். போகும் கச்சேரிகளில் எல்லாம் இந்த பாடலை பாடுகிறார்.. அனைத்து கச்சேரிகளிலும் இந்த பாடலை பாடியவர்கள் யார் என்று தெரியாது என சொல்லுவாராம். அப்பொழுது அவர்கள் பாடியவர்கள் யார் என தெரியும் என்பதற்காக அப்படி சொல்லுவாராம். அப்பொழுதும் விவரம் தெரியாமலேயே இருந்துள்ளது.

 

ஒரு நாள் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலை சுற்றி வரும் பொழுது திகைத்து நின்று விட்டாராம். அந்தப் பாடலை ஒரு கல்வெட்டுகளில் எழுதி கீழே ஆண்டவன் பிச்சி என போட்டிருந்ததாம்.

 

யார் அந்த ஆண்டவன் பிச்சி என்ற தேடல் டிஎம்எஸ் க்கு தொடங்கியுள்ளது. அப்புறம் தான் அவருக்கு உண்மை கிடைத்துள்ளது ஆண்டவன் பிச்சி என்பது புனைப்பெயர், இயற்பெயர் மரகதவல்லி.

 

இவர் படிப்பறிவு இல்லாதவர். பத்து வயதிலிருந்து முருகனை நினைத்து நினைத்து முருகனைப் பற்றியே பாடிக் கொண்டிருப்பாராம். ஒரு சமயம் திருமணமாகி 9 பிள்ளைகள் இருக்கும் நிலையில் முதுமையில் துறவறம் பூண்டு அனைத்து கோயிலுக்கும் சென்று பாடல்களை பாடி வருவாராம்.

 

இப்படி ஒரு நாள் காஞ்சியில் உள்ள அம்மனின் கோயிலில் சென்று பாடல்கள் பாடிய பொழுது, அவரது தோற்றத்தை கண்டு இவரை வெளியே துரத்தி விட்டார்களாம் ஆனால் காஞ்சி மகா பெரியவர் மட்டும் இவரது மகிமையை உணர்ந்து கொண்டு அவருக்கு பிரசாதம் கொடுத்து இனிமேல் உனது பெயர் ஆண்டவன் பிச்சி என்று சொல்ல, அனைத்து கோயில்களுக்கும் போய் பாடல்களை பாடி பெருமை சேர்த்தார்.