தூக்கி எறியும் மாதுளை தோல்.. இரத்த குழாய் அடைப்பிற்கு மருந்தாகிறது தெரியுமா?

0
129

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிகப்படியான கொழுப்பு நிறைந்திருந்தால் அவை இரத்த குழாய் அடைப்பை உண்டாக்கிவிடும்.எனவே இந்த இரத்த குழாய் அடைப்பு சரி செய்ய மாதுளை தோல் டீ அல்லது பூண்டு டீ செய்து பருகுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)மாதுளை பழத் தோல் – ஒரு கப்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

செய்முறை படி ஒன்று:

முதலில் மாதுளை பழத்தின் தோலை உரித்து தண்ணீர் போட்டு நன்றாக அலசிக் கொள்ள வேண்டும்.

செய்முறை படி இரண்டு:

பிறகு இதை வெயிலில் போட்டு வற்றல் பதம் வரும் வரை காய வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை படி மூன்று:

மாதுளை தோல் நன்கு காய்ந்து வந்ததும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை படி நான்கு:

பிறகு மாதுளை தோல் பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை படி ஐந்து:

பின்னர் பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இரண்டு நிமிடங்கள் வரை காத்திருந்து அரைத்த மாதுளை தோல் பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

செய்முறை படி ஆறு:

தண்ணீரின் நிறம் மாறிவரும் வரை கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து பருகினால் இரத்த குழாய் அடைப்பு சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வெள்ளைப் பூண்டு பற்கள் – இரண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

செய்முறை படி ஒன்று:

இரண்டு வெள்ளைப் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை படி இரண்டு:

பிறகு இதை ஆறவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை படி மூன்று:

அடுத்து பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

செய்முறை படி நான்கு:

பிறகு நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

செய்முறை படி ஐந்து:

இந்த பூண்டு பானத்தை ஒரு கிளாஸிற்கு வடித்து தூயத் தேன் சேர்த்து பருகினால் இரத்த குழாய் அடைப்பு சரியாகும்.