மனிதரின் உடல் இயங்க நாளொன்றுக்கு 1600 கிலோ கலோரிகள் தேவைப்படுகிறது.இது உணவின் மூலம் கிடைக்கிறது.இந்த கலோரிகள் உடலிற்குள் சென்றதும் ஆற்றலாக மாறி உடலில் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.ஆனால் அளவிற்கு மிஞ்சிய கலோரிகள் உடலுக்குள் சென்றால் அது கொழுப்புகளாக படிந்து உடல் எடையை கூட்டுகிறது.
உடலில் இருக்கின்ற தேவையற்ற கலோரிகளை உடற்பயிற்சி செய்தல்,டயட் இருத்தல்,நடைபயிற்சி,யோகா உள்ளிட்ட வழிகளில் குறைக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் வேலைப்பளு,உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் உடற்பயிற்சி,நடைபயிற்சி,யோகா செய்வதற்கு நேரம் இல்லாமல் போகிறது.இந்த அதிகப்படியான கலோரிகளை சில எளிய வழிகள் மூலம் எளிதில் எரிக்க முடியும்.
உடற்பயிற்சி,வாக்கிங்,ஜாகிங் செய்து தான் உடல் கலோரிகளை எரிக்க வேண்டும் என்பதிலை வாய் விட்டு சிரிப்பதனாலும் குறைந்து 40 கலோரிகளை எரிக்க முடியும்.உங்கள் துணையுடன் குறைந்தது 30 நிமிடங்கள் படுக்கை விளையாட்டில் ஈடுபட்டால் சுமார் 200 கலோரிகளை எரிக்க முடியும்.
உங்கள் துணைக்கு ஒரு நிமிடம் முத்தம் கொடுப்பதால் 5 கலோரிகள் எரிக்கப்படும்.உங்கள் துணைக்கு உணர்ச்சி போங்க முத்தம் கொடுப்பதன் மூலம் கலோரிகளை எரிக்க முடியும்.கடின உடற்பயிற்சி எதுவும் செய்யலாம் முத்தம் கொடுப்பது போன்ற தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும் கலோரிகளை எரிக்கலாம்.
குளிக்கும் பொழுது பாட்டு படுவது,நடமாடுவது போன்ற செயல்கள் மூலம் உடலிலுள்ள கலோரிகளை எளிதில் எரிக்க முடியும்.உங்கள் துணை,காதலர் அல்லது மனதிற்கு பிடித்தவரை கட்டிப்பிடிப்பதன் மூலம்கிட்டத்தட்ட 60 கலோரிகள் எரிக்கப்படும்.குழந்தைகளுடன் விளையாடுவது,செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது போன்ற செயல்கள் மூலம் உடலில் இருக்கின்ற கலோரிகளை எளிதில் எரிக்க முடியும்.