மணிரத்னம் இயக்கத்தின் ஷாருக்கான் மனிஷா கொய்ராலா நடித்த உயிரே திரைப்படம் அனைவருக்கும் தெரியும். இது என் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் இரட்டை அர்த்தத்தில் வரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படத்தில் வரும் இன்னொரு பாடலும் இரட்டை அர்த்தத்தில் தான் உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள் அது உண்மையா.
இந்த பாடலை வைரமுத்து அவர்கள் எழுதியிருப்பார்கள். வைரமுத்து என்றாலே காதல் சொட்ட சொட்ட பாடல் எழுதுவது சகஜம்தான்.
இந்த பாடல் ஒரு சோகப் பாடலாக கருதிய நிலையில், இந்த பாடலில் எவ்வளவு இரட்டை அர்த்தங்கள் உள்ளனவா என்று யோசிக்க தோன்றுகிறது.
இந்த பாடலின் மூலம் ஒரு மனிதன் காதலை ஏழு நிலையை பற்றி சொல்லி இருப்பார் வைரமுத்து.
1. முதல் நிலை கண்கள் பார்த்து காதல் தோன்றி மோகத்தில் திளைப்பது முதல் நிலை.
2. ஆண் பால் பெண்பாலை ஈர்ப்பது, பெண்பால் ஆண்பாலை இருப்பது இரண்டாம் நிலை
3. “மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ…
இது காதலின் மூன்றாம் படி நிலையோ…
என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ…
என் உயிர் மட்டும் புது வித வழி கண்டதோ”
மெய் என்பது உடல், தீண்டும் நேசம் அதாவது உடலை தொட வேண்டும் என்ற ஆசை தொடங்கி விட்டது என்பது பொருள். என் உடல் வலி அமர்தம் வழிகின்றது என்றால் புரிந்து கொள்ளுங்களேன், ஆண்களின் உடலில் வரும் மாற்றத்தை அவர் குறிப்பிடுகிறார். இது மூன்றாம் நிலையாம்.
4. “என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்…
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்…
இதுதான் காதலின் ஐந்து நிலை…
நான் உன் கையில் நீா்த்திவலை”.
இதில் தான் இரட்டை அர்த்தமே , நான் அனைத்தும் உன்னிடம் தந்து உன்னிடம் சரண் அடைந்து விட்டேன். என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன் என்றால், ஆண் திரவம் பெண்ணுக்குள் போய்விட்டது. இப்பொழுது உன்னுள் நான் ஒரு நீர் நிலை திரவம் என்கிறார் வைரமுத்து. இதுதான் ஐந்தாவது நிலை.
5. ஆறாவது நிலை இது இந்த மோகத்திலேயே பித்து பிடித்து வரும் முக்தி நிலைதான் ஆறாவது நிலை.
6. 7 ஆவது மரண நிலையாம்.
இவ்வளவு நாள் இந்தப் பாடலை நாம் சோகப்பாடல் என்று எண்ணி இருக்கிறோம் ஆனால் வைரமுத்துவின் வரிகள் செய்த ஜாலங்களை பார்த்தீர்களா.