கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் மறைமுகமாக ஒன்றை எடுத்துக்காட்டும். அப்படி எவ்வளவோ படங்களுக்கு பாடல் எழுதி சென்சார் அதிகாரிகள் நீக்க சொல்லிய பாடல்கள் பலவும் உள்ளன அதை பற்றி இங்கே காண்போம்.
அப்பொழுது பாவமன்னிப்பு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அதற்கு பாடல் வரிகள் அனைத்தும் கண்ணதாசன் தான் எழுதினார்.
அதில் ஒரு பாடல் ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை”
பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த பாடலை வெளிவிடக் கூடாது இந்த பாடல் திருத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
இந்தப் பாடலில் வரும் இந்த வரிகள்
‘எதனைக் கண்டான்
மதங்களை படைத்தான்’
இந்த வரிகளை மாற்றினால் தான் பாடல் வெளிவரும் இல்லை என்றால் பாடல் வெளிவராது. என்று சென்சார் அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.
குழுவினர் கண்ணதாசனிடம் சென்று இந்த மாதிரியாக சென்சார் அதிகாரிகள் இந்த வரிகளை மாற்றி எழுதி தர சொல்கிறார்கள் என்று சொல்லி உள்ளனர்.
கண்ணதாசன் சிரித்தபடியே நான் சரியாக தானே எழுதி இருக்கிறேன்.
இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ?
இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ?
கடவுள்கள் பெயரை சொல்லி , அடுத்து வந்த மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?” என்ற கண்ணதாசன் சொன்னவுடன் சென்சார் அதிகாரிகள் திகதி போய்விட்டார்கள் அவர்கள் மனதுக்குள்ளும் அவர் சொல்வது சரிதான் என்று தோன்றினாலும் அவர்களது ஈகோ இதை தடுத்து விட்டது மாற்றினால் தான் பாடல் வெளிவரும் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் கண்ணதாசன் அதை மாற்றி அமைத்து எழுதிக் கொடுத்தார்.
எதனைக் கண்டான்
பணம்தனைப் படைத்தான்.”
இப்போது ஓகேவா என்று கண்ணதாசன் கேட்க, சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டார்கள்.
அதேபோல்” பாலிருக்கும் பசியிருக்கும்” என்ற பாடலிலும் சில வரிகளை நீக்க சொல்லி சென்சார் அதிகாரிகள் கண்ணதாசனை தொல்லை செய்தார்கள்.
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே…”
இதற்கு கண்ணதாசன் “வேதங்களை எழுதியவர் விஷ்வாமித்திரர். அவரையே காதல் விடவில்லை!, என்று தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொன்னாலும், சென்சார் அதிகாரிகளிடம் சரியான விளக்கத்தை சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
யார் சொன்னாலும் இதை நான் மாற்ற மாட்டேன் என்று அவருடைய சரியாக இருந்தார். நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் கவிஞரே! ஆனால் படம் வெளியாக வேண்டும் என்று கெஞ்சியதால் பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்தாராம் கண்ணதாசன்.