பணத்தை மாற்றி அனுப்பிவிடீர்களா? பயம் வேண்டாம் – இதை செய்யுங்கள்!

0
161
Did you transfer the money? Do not be afraid - do it!

பணத்தை மாற்றி அனுப்பிவிடீர்களா? பயம் வேண்டாம் – இதை செய்யுங்கள்!

பொதுவாக யாராக இருந்தாலும் முக்கியமான பணிகளில் இருக்கும் போது வேறு ஏதேனும் ஒரு வேலை இருக்கும் பட்சத்தில் நாம் ஏதோ ஒரு பதட்டம் அல்லது வேறு ஏதேனும் சில காரணங்களினால் சில நேரங்களில் தவறுகள் ஏற்பட்டு விடும்.

அப்படி ஒரு தவறை நாம் செய்யும் போது நமக்கு ஏற்படும் பதட்டத்தின் காரணமாக அக்கௌன்ட் நம்பர் தவறுதலாக போய் விட்டால், என்ன செய்வதென்று அவதியுற வேண்டாம். பயப்படவும் வேண்டாம் இதை செய்யும் போது உங்களது பணத்தை பெற்று கொள்ளலாம்.

அப்படி எதும் நடந்து விட்டால் முதலில் உங்களது வங்கி கணக்கு உள்ள பாங்கின் மேனேஜர்க்கு போனில் தொடர்பு கொண்டோ அல்லது ஈமெயில் மூலமோ தெரியப்படுத்த வேண்டும்.

உங்களது ப்ரான்ஞ்ச் மேனேஜருக்கு உங்களது வங்கி கணக்கு எண், மற்றும் தவறுதலாக அனுப்பிய கணக்கு எண், தேதி, நேரம், பணத்தின் மதிப்பு போன்ற தகவல்களை தெரிவிக்கவும்.

அதன் பின் மேனேஜர் அந்த பேங்கை தொடர்பு கொண்டு பேசுவார். புகார் ஒன்றும் தாக்கல் செய்யப்படும். அதன்பின் உங்களது பணத்தை வாடிக்கையாளரிடம் இருந்து திரும்ப பெற அனுமதி அளிக்கும். அந்த புகாரின் மூலம் நடவடிக்கை எடுத்து உங்களது பணத்தை உங்களுக்கு திரும்பவும் பெற்று தரும்.

உங்களது புகாரை பெற்ற பின் வங்கி வாடிக்கையாளருக்கு எதிராக ஒரு புகாரை பதிவு செய்யும். ரிசர்வ் பேங்கின் அறிவுரைப்படி பேங்க் கணக்கில், பணத்தை மாற்றிய பின் கண்டிப்பான அறிவுறுத்தல்களை ஏற்க வேண்டும்.

ஆன்லைன் பாங்கிங்கில் பாதுகாப்பாக இருக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம். ஹேக்கர்கள் கால் அல்லது ஈமெயில் தவிர்க்கலாம், தெரியாத நபருடன் இணைக்க வேண்டாம், நெட் பேங்கிங் பின் மற்றும் பாஸ்வர்டை ரகசியமாக வைத்திருங்கள்,  பாஸ்வர்டை அவ்வப்போது மாற்றுங்கள், வங்கி விவரங்களை போனில் யாருக்கும் பகிர வேண்டாம்,  ஆன்லைன் பேங்கிங்க்கு பொது கம்பியூட்டர்களை பயன்படுத்த வேண்டாம்,  ஈமெயில்கள் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்களில் பதிக்கப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், தொலைந்து போன கார்டை பற்றி உடனடியாக புகாரளிக்கவும்.