Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!

#image_title

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக பிரச்சாரத்தின்போது பேசியிருந்த சரவணன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடியில், வெறும் 5 கோடியை மட்டுமே தொகுதிக்கு செலவழித்ததாகவும், களத்தில் அல்ல.. எக்ஸ் தளத்தில் மட்டுமே அவர் ஆக்டிவாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

இதனால் கடும் கொந்தளிப்படைந்த சு.வெங்கடேசன், சரவணனை எச்சரித்து எக்ஸ்தள பதிவை வெளியிட்டுள்ளார். மதுரை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரவணன், வாக்கு சேகரிப்பதற்காக உருவாக்கும் யுக்திகள் அவரையே கேலிப்பொருளாக மாற்றி விடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

தொகுதிக்காக ஒதுக்கிய நிதியை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டதாகவும், இதனை அப்போதைய திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உடன் இருந்து பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

சரவணன் பைனாக்குலர் மூடியை திறக்காமல் விட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் உண்மையிலேயே தனது கண்களைகூட திறந்து பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாகவும், அவர் இதனை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் சு.வெங்கடேசன்.

Exit mobile version