Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!!

Warning to the public!! Do not download loan apps!!

Digital-lending-app-fraud-Home-Ministry-May-Ban-300-Quick-Loan-Apps

சைபர் குற்றவாளிகளின் புதிய அணுகுமுறையாக இந்த கடன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக கடந்த 2024 மற்றும் 2025 என இரண்டு ஆண்டுகளிலும் பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன என்றும் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இது குறித்து சைபர் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிப்பதற்கு சைபர் குற்றவாளிகள் தற்பொழுது கடன் செயலிகளை பயன்படுத்துவதாகவும் கேண்டிகேஷ் , பிரைம் லேண்ட் போன்ற ஆர்பிஐ ஒப்புதல் பெறாத கடன் செயலிகளால் பொதுமக்கள் ஆபத்தில் சிக்குகின்றனர் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக குறைந்த வட்டி உடனடியான ஒப்புதல் என பணம் பெறுவதற்கு மிக எளிமையான மற்றும் கவர்ச்சியான பல விளம்பரங்களை இவர்கள் வெளியிடுவதால் மக்கள் பலரும் இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதாகவும் அவ்வாறு பதிவிறக்கம் செய்யும்பொழுது அவர்களுடைய அனைத்து தரவுகளும் சைபர் குற்றவாளிகளுக்கு சென்று விடுகிறது என்றும் இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்றும் சைபர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செல்போன் செயலிகளில் கடன்களைப் பெற நினைக்கக் கூடியவர்கள் அந்த செயலிகள் ஆர்பிஐயின் உத்தரவின் பெயரால் நிறுவப்பட்டிருக்கிறதா அதனுடைய நம்பகத்தன்மை என்ன என்பதை ஆராய்ந்த பின்பு பயன்படுத்தலாம் என்றும் அதிலும் முக்கியமாக எந்த ஒரு கடன் செயலிலும் தங்களுடைய முக்கிய தரவுகளை அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்றும் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் போலி செயல்களால் 9,873 புகார்கள் தமிழகத்தில் எழுந்திருக்கிறது என்றும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 3,834 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சைபர் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்த புகார்கள் மற்றும் செய்திகளை காவல்துறையினரிடம் தெரிவிக்க நினைக்க கூடியவர்கள் 1930 என்ற சைபர் போலீசாரின் கட்டணமில்லா எண்ணை அழைத்து தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version