வங்கிகளுக்கு சென்று நாள் கணக்கில் காத்திருந்து வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து கடன் பெறுவது என்பது மிகப் பெரிய வேலையாக இருந்தாலும், அதுவும் நோய்த்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்கள், அவர்களுக்கு ஏற்படும் பணதேவைகளும், பணவீக்கமும், அதிகரித்திருக்கிறது.
வங்கிகளுக்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவும், கடன் வழங்குவதற்கான வழிமுறைகளை மேலும் கடினமாகவும் வைத்திருக்கிறார்கள்.
இதனை பயன்படுத்திக்கொண்டு சிலர் பின்டெக் நிறுவனங்கள் பொதுமக்களின் அவசரத்தையும், பணத்தேவைகளையும் வர்த்தகமாக மாற்றியிருக்கின்றன.
அப்படி பின்டெக் நிறுவனங்கள் மூலமாக டிஜிட்டல் முறையில் அதிக கடன் பெறுவோர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் இருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.
பின் டெக் அசோசியேசன் பார் கன்ஸ்யூமர் எம்பவர்மெண்ட் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையினடிப்படையில் 2021 22 உள்ளிட்ட நிதியாண்டில் இந்த நிறுவனங்கள் கடன் வழங்குவதை இருமடங்காக அதிகரித்ததன் மூலமாக 2.66 கோடியாக இருந்த கடன் தொகை தற்போது 18,000 கோடியாக அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நுகர்வோர் மேம்பாட்டிற்கான பின்டெக் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்ற செக்புக் ஏர்லி சேலரி கிஷ்ட் கிரெடிட் பி லோன் பிராண்ட் நான் ஸ்டாப் பாக்கெட் மற்றும் பாக்கெட் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் பகிர்ந்த தரவுகளினடிப்படையில் கடன் வழங்கப்பட்டிருக்கின்றன, அதன் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடன் வழங்கும் செயலிகளின் சந்தையாக தென்னிந்தியா இருந்து வருகிறது.
இந்த 9 பின்டெக் செயலிகள் மூலமாக வழங்கப்பட்ட டிஜிட்டல் கடன்களில் 44% தென்னிந்தியாவுடையது என்று சொல்லப்படுகிறது. 24 சதவீதம் மேற்கு பகுதியில் 21 சதவீதம் வடஇந்தியாவையும், மீதமுள்ள 10 சதவீதம் கிழக்கு பகுதியில் இருக்கின்ற மாநிலங்களையும் குறிப்பிடுகின்றது
இந்திய அளவிலான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்ட்ரா முதலிடம் வகிக்கிறது, இதன் கடன்கள் 16% ஆகும். டிஜிட்டல் முறையில் அந்த மாநில மக்கள் 2880 கோடி ரூபாய் வரையில் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்தபடியாக கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த மக்கள் அதிக அளவில் பின்டெக் செயலிகள் மூலமாக டிஜிட்டல் கடன் பெறுவது உறுதியாகியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இதுவரையில் 14% பெயர் டிஜிட்டல் முறையில் 2,880 கோடி ரூபாய் வரையில் கடன் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த இடத்தை தெலுங்கானா பிடித்திருக்கிறது, அந்த மாநிலத்தில் இணையதளம் மூலமாக 10 சதவீதம் பேர் 18000 கோடி ரூபாய் வரையில் கடன் பெற்றிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு சற்று தனித்து காணப்படுகிறது.
இங்கு பின்டெக் நிறுவனம் மற்றும் இணையதளம் மூலமாக 9 சதவீதம் பேர் மட்டுமே அதாவது 1,620 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல ஆந்திர மாநிலத்தில் டிஜிட்டல் முறையில் 9% பேர் 1,620 கோடி கடன் பெற்றிருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லியிலுள்ள நிலையில், 66 சதவீதம் பேர் 1,080 கோடி வரை கடன் பெற்றிருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.