திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட பேக்கரி உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள்.
நோய் தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கடைகள், திருமண மண்டபங்கள், போன்றவற்றில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, அபராதம் விதித்து, அதோடு சீல் வைத்துவிடுகிறார்கள் என்று சொல்ல படுகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான அதிகாரிகள் நகரின் பல இடங்களில் ஆய்வு செய்து வந்தார்கள்.
இந்த ஆய்வு நடைபெற்றபோது ஆர்.என் காலனி பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள். இதேபோல அரசு மருத்துவமனை பகுதியில் இருக்கின்ற பேக்கரி கடை மற்றும் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற தேனீர் கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக உரையாற்றிய மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.