கொரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில் ,தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.ஜூலை மாததில் நோய்தொற்று தீவிரமடைந்த நிலையில் இருந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்கத்தில் பாதிப்பு குறைவாகவே இருந்தன. ஆனால், ஜூலை இறுதி மாதத்தில் நோய் அதிகரித்து காணப்பட்டது.மாதத்தில் இரண்டு இலக்க எண்ணிக்கையில் வெளியான கொரோனா நோய் தொற்று முடிவுகள் ,ஜூலை மாதத்தில் மட்டும் பரிசோதனை முடிவுகள் எண்ணிக்கையில் 3 இலக்காக வெளியாகி வந்தது.அதன்படி ஜூலை 26 ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 203 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நாளொன்றுக்கு புதிதாக 100 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுவரை திண்டுக்கல்லில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 பேர் என தெரியவந்துள்ளது.
தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று தீவிரமடைந்ததால் பரிசோதனை முடிவுகளில் தெரிய வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை மொத்தம் 3878 பேர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிராம பகுதியில் நோய்த்தொற்று அதிகமாகவே காணப்படுகின்றது.இதனை அறிந்த ஊர் பொதுமக்கள், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பத்து நாட்கள் முழு வருடங்களை அமல்படுத்த முடிவு செய்தனர்.நாளை முதல் தொடங்கி இருபதாம் தேதி வரை நத்தம் உள்ளிட்ட நான்கு ஊராட்சியை சேர்ந்த மக்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப் போவதாக கூறியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புறநகரில் கடந்த 3 மாதமாக அதிகரித்து வந்த நோய், தற்போது கிராம பகுதியில் பரவத் தொடங்கியது.தற்போது தான் திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று வேகமாக பரவி உச்சநிலையை அடைந்து இருப்பதாக பரிசோதனையில் முடிவில் தெரிய வருகிறது.