பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு

0
231

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இருக்க மாட்டார்…. முன்னாள் வீரர் கணிப்பு

ஆசிய கோப்பைக்கான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் எளிதான பணியாக இருக்காது.

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அனியிலும் சிறப்பாக விளையாடிய அவர் தற்போது ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பின்வரிசையில் ஆடுவதற்கு ஜடேஜா, ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளதால், இதில் யாரை ஆடும் லெவனில் தேர்வு செய்வார்கள்,  எந்த இடத்தில் விளையாட வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பல முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் மூத்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான “சூர்யகுமார் யாதவ் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரு அச்சமற்ற கிரிக்கெட் வீரர், அவர் நிச்சயமாக வரும் நாட்களில் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவார். அவர் ஒரு அட்டாக்கிங் வீரர், முதல் பந்தை எதிர்கொண்டால் கூட, அவர் அடித்து ஆடும் மனநிலையுடன் வருகிறார்.

அவர் தனது விக்கெட்டைக் காப்பாற்ற தனது கிரிக்கெட்டை விளையாடுவதில்லை. கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால், கடந்த 3-4 மாதங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாததால் 4வது இடத்தில் விளையாட வேண்டும். அவரை ஓப்பனிங் செய்ய வைத்தால் அவருக்கு எளிதாக இருக்காது. ”என்று டேனிஷ் கனேரியா கூறினார்.

கனேரியா ஆடும் லெவன்

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.