Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!!

#image_title

டிப்ளமோ முடித்தவர்களே நீங்கள் ரெடியா!!! உங்களுக்காக மாதம் 80000 சம்பளத்துடன் வேலை இதோ!!!

டிப்ளமோ படித்து முடித்தவர்களுக்கு மாதம் 80000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

சி.எம்.சி என்று அழைக்கப்படும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. தற்பொழுது இந்த கல்லூரியில் காலியாக இருக்கும் 11 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

அதன்படி தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக 12.09.2023 முதல் 25.09.2023 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பணி பற்றிய மற்ற விவரங்கள்…

நிறுவனத்தின் பெயர் – சி.எம்.சி கல்லூரி(கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி)

பணியின் பெயர் – சீனியர் ரெசிடென்ட், டியூட்டர், டெக்னீசியன்

மொத்த காலிப் பணியிடங்கள் – 11

கல்வித் தகுதி – டிப்ளமோ, பிஜி.டிப்ளமோ, பிஸ்.சி, எம்.எஸ்.சி, எம்.டி, எம்.எஸ்

சம்பளம் – மாதம் 15,318 ரூபாய் முதல் 80000 வரை

பணியிடம் – வேலூர்

தேர்வு செய்யப்படும் முறை – எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் வாயிலாக https://www.cmch-vellore.edu/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.09.2023

 

Exit mobile version