தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை!!மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் பட்டயப் படிப்புகளுக்கான ஓர் அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான நேரடி சேர்க்கையை அறிவித்துள்ளது.
கல்வித்தகுதி :-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு :-
எழுத்து தேர்வு, நேர்காணல் எதுவும் இல்லை.
சேர்க்கை :-
நேரடி சேர்க்கை மூலம் இரண்டு ஆண்டு பட்டய படிப்புகளில் சேரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முதுநிலை பட்டயப் படிப்பு :-
அதேபோல, அறிவியல் துறையில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டு கால முதுநிலை பட்டயத்தில் (டிப்ளமோ) பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சி மேற்கொள்ள நேரடி சேர்க்கையில் பங்கு பெற்று அனுமதி பெறலாம்.
கடைசி தேதி :-
நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31, 2023
வேலை வாய்ப்புகள் :-
பயிற்சியை நிறைவு செய்பவர்கள் ரிலையன்ஸ், டி.வி.எஸ் குழுமத்தின் தொழிற்சாலைகள், சாம்சங், ஹூண்டாய், போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை சிப்பெட் நிறுவனம் உருவாக்கும்.
சிறப்பம்சம் :-
இது தவிர, 12-ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வியைத் தொடர முடியாதவர்கள், மூன்றாண்டு கால பட்டய படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் இரண்டாம் ஆண்டில் அனுமதி பெற்று வேலைவாய்ப்பையும் பெற முடியும்.
விவரங்கள் :-
9360098600/ 9600254350 என்ற அலைபேசி எண்ணையோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.