Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேரடி நியமனம்.. 760 அரசு பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

Direct Recruitment.. 760 Govt Posts.. Tamil Nadu Govt Notification..

Direct Recruitment.. 760 Govt Posts.. Tamil Nadu Govt Notification..

“டிப்ளமோ மற்றும் பொறியியல்” படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை “தமிழ்நாடு பொதுப்பணித்துறை”அறிவித்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயனடையுங்கள், பொதுப்பணித்துறை அறிவித்துள்ள “760 அப்ரண்டிஸ்” பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள “760 பணியிடங்களில்”, பொறியியல் படித்தவர்களுக்கு “500” இடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு “160” இடங்களும், பொறியியல் பட்டதாரி அல்லாதவர்களுக்கு “100” பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊக்கத்தொகை, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தமிழ்நாடு பொதுப்பணித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :
பொறியியல் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : 9,000

பொறியியல் பட்டதாரி அல்லாதவர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc/B.Com/BBA/ B.A/BCA/BBM படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : 8,000

டிப்ளமோ – அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : 8,000

வயது வரம்பு: குறைந்தது “18 முதல் அதிகபட்சம் 24” வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வுகள் அளிக்கப்படும்.

தேர்வு முறை : பொறியியல், டிப்ளமோ, டிகிரி படிப்புகளில் பெற்ற “மதிப்பெண் அடிப்படையில்” நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற வலைதள பக்கத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2024.

Exit mobile version