Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இயக்குனர் அமீரின் தாயார் காலமானார்… திரையுலகினர் இரங்கல்!

இயக்குனர் அமீரின் தாயார் காலமானார்… திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீரின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவர் அமீர். அவர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம் மற்றும் பருத்திவீரன் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாக அமைந்துள்ளன. தற்போது நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த வடசென்னை திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அவரின் தாயார் பாத்து முத்து (85) நேற்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இன்று அவரின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த அமீர் தற்போது இந்தியா திரும்பியுள்ளார்.

Exit mobile version