Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா காலமானார்!! திரை பிரபலங்கள் இரங்கல்!!

Director and actor Manophala passes away!!

Director and actor Manophala passes away!!

இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா காலமானார்!!

நடிகர் மனோபாலா இன்று காலமானார். 1956 ஆம் ஆண்டு நாகர்கோவில் மாவட்டத்தில் பிறந்த இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர்.

மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார்.  மேலும் இவர் 500 மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பளாராக மாறினார். சதுரங்க வேட்டை 2 படத்தையும் இவர்தான் தயாரித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மனோபாலாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நக்குறைவு காரணமாக அவதிபட்டுக் கொண்டிருந்த அவர் இன்று காலமானார்.

இவர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் போன்றோருக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

அவரது மறைவு சினிமா பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்களில், இயக்குனரும், நடிகருமான நண்பர் மனோபாலா அவர்களுடைய இறப்பு தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version