Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல திரைப்பட இயக்குனரின் மனைவி மரணம்! கதறிய இயக்குனர் சோகத்தில் திரையுலகம்!

தன்னுடைய மனைவியின் உடலை பார்த்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கதறி அழுதிருக்கிறார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ராஜாராணி, மான்கராத்தே, மரகதநாணயம் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அருண்ராஜா காமராஜ். பன்முகத் திறமை கொண்ட இவர் பீட்சா, ஜிகர்தண்டா, தெரி , காக்கி சட்டை, போன்ற திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், ஒரு சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் வரும் நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் பாடி அசத்தியிருக்கிறார். அதன் பின்னர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதோடு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த கனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தற்சமயம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதற்கிடையில் நோய்த்தொற்று காரணமாக, அருண்ராஜா காமராஜ் அவருடைய மனைவி சிந்துஜாவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிந்துஜா தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இயற்கை எய்தினார்.

இந்த சூழ்நிலையில், சிந்துஜா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நோய்த்தொற்று கவச உடையில் அருண்ராஜா காமராஜ் வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் தன்னுடைய மனைவியை பார்த்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிருக்கிறார். ​இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி இருக்கிறது

Exit mobile version