பிரபல ஹாலிவுட் பேட்மேன் படத்தின் இயக்குனர் புற்று நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக இந்திய மற்றும் உலகளவில் திரைத்துறை நட்சத்திரங்களின் தொடர் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் புற்றுநோயால் இறந்தார். மாரடைப்பால் சர்ஜா சிரஞ்சீவியும், மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங்கும், இர்பான் கான் போன்ற பாலிவுட் நடிகர்கள் இறந்தனர். இதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு வெளியான “பேட்மேன் பார் எவர்’ மற்றும் “பேட்மேன் அண்ட் ராபின்’ போன்ற ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய உலகப்புகழ்பெற்ற இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் உயிரிழந்தார்.
கடந்த கால ஹாலிவுட் சினிமாக்களில் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருந்தவர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ஜோயல் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்பு ஹாலிவுட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனாவால் பொதுமக்கள் உயிரிழப்பு மறுபக்கம் திரை நட்சத்திரங்களின் தொடர் உயிரிழப்பு ஏற்பட்டு 2020 வருடம் மிக மோசமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.