Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்

ஒட்டு மொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் வெளியீடு குறித்து இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்

தமிழ் திரைத்துறையில் இது வரை எந்தவொரு இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை தைரியமாக திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநரான மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு,கலப்பு திருமணம் என்ற பெயரில் காலம் காலமாக திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை மட்டுமே தொடர்ந்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி வருவது பெரும்பாலான வட மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இவ்வாறு திட்டமிட்டே செயல்படும் இவர்கள் இந்த நாடக காதல் மூலம் அந்த சமுதாய பெண்களை திருமணம் செய்து கொண்டு பெற்றோர்களிடம் பணம் வாங்கி வர சொல்வது, சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமல் போலிப் பதிவு திருமணங்கள் மூலமாக பெண்ணை பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களை செய்து வரும் சிலரை பற்றி பெண்களுக்கும் அவர்களை பெற்ற பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை கொடுக்கும் படம் என்று இயக்குனர் மோகன்.ஜி கூறியுள்ளனர்.

மக்களிடமிருந்து முதலீடு பெறும் கிரவுட் பண்ட் மூலமாக எடுக்கபட்ட இந்த திரௌபதி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் வெளியான நாள் முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் யூ டியூபில் முதல் ஐந்து இடந்திற்குள் ட்ரெண்ட் ஆகி வந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திற்கு இணையாக ட்ரெண்ட் ஆகி வந்தது. இவ்வாறு தமிழகம் முழுவதும் இந்த படத்திற்கான வரவேற்பு பெருகியது. வரவேற்பை போல இந்த படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியது. இவ்வாறு கடந்த சில வாரங்களாக படம் வெளியாகுமா? ஆகாதா? வெளியாகும் என்றால் எப்போ வெளியாகும் என மக்கள் மனதில் கேள்விகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் திரௌபதி படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை நாளை வெளியிடுவதாக இயக்குனர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

Exit mobile version