Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?

Director mysskin's pisaasu2 update

Director mysskin's pisaasu2 update

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?

2014ஆம் ஆண்டு பிசாசு திரைப்படம் தமிழில் வெளியானது.இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை இயக்கினார்.இயக்குனர் பாலா இந்த படத்தைத் தயாரித்தார்.அறிமுக நடிகரான நாகா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இந்த படத்திற்கு அர்ரோல் கொரெல்லி இசையமைத்தார்.படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்தார்.

இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த வருடத்தின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும்.இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக இயக்குனர் மிஷ்கின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.சமீபகாலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அஜ்மல் ஆகியோர் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது.தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.இந்த படத்தின் பேட்ச் வொர்க் எனப்படும் படப்பிடிப்பு மூன்று நாட்களாக சமீபத்தில் நடந்தது.இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால் பிசாசு2 படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.திரைப்படம் கூடிய விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

படக்குழு டிசம்பர் மாதம் பிசாசு2 திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.முதல் பாகமான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் இதுவும் திகில் திரைப்படம் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.மிஷ்கின் இயக்கும் இந்த படத்தை அவரது ரசிகர்களும் தமிழ் திரையுலகமும் எதிபார்த்துக் காத்திருக்கின்றனர்.மிஷ்கின் இதற்கு முன் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் இந்த படமும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

Exit mobile version