இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்… டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

0
174

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்… டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பின்பு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமாகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தையும் கொண்டிருக்கும்.

பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு  சில வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், இந்நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். மாநாடு வெற்றிப் படத்துக்குப் பிறகு இந்த படத்தை அவர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும், காமெடி நடிகர் சூரி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நிவின் பாலியோடு சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்று இயக்குனர் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஏழு மலை ஏழு காடு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியான வித்தியாசமான மோஷன் போஸ்டரும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.