cinema: 7 முறை நான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இயக்குனர் செல்வராகவன்.
தமிழ் இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு விதமான இயக்கங்களில் இருக்கும். இவர் திரைப்படங்கள் அனைத்தும் தனித்தன்மையான கதைகளத்தை கொண்டிருக்கும்.மேலும் இவர் தமிழின் உச்ச நடிகரான தனுஷின் சகோதர் ஆவார்.
இவர் இயக்கிய திரைப்படங்களில் மனதில் நின்ற படங்களுள் ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் இன்றும் காலம் கடந்து பேசப்பட்டு வருகிறது.தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் தற்கொலை பன்றி இன்ஸ்டாவில் கூறியிருந்தார், அவர் கூறுகையில் வாழ்க்கையில் உலகம் முழுசா பார்த்தா கூட இந்த நிலையை கடக்க தவர்கள் யாருமில்லை. அதுதான் தற்கொலை மற்றும் மன அழுத்தம் இவ்வளவு என் நானே 7 முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். ஆனா அது இப்போது இல்லை நீண்ட வருடங்களுக்கு முன் ஆனால் ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு குரல் கேட்கும் அமைதியாக இரு அமைதியாக இரு என்று.
நானும் கடவுள் ஏதோ சொல்றாருன்னு விட்ருவேன். அதன் பின் பத்து நாட்கள் கழித்தோ அல்லது 6 மாதம் கழித்தோ நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் அப்போது தோன்றும் நாம் தற்கொலை செய்திருந்தால் இதையெல்லாம் மிஸ் பன்னிருபோம்னு அதனால் வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாறும் அதனால் தற்கொலை செய்வது மிகவும் தவறான ஒன்று. இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.