Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் இயக்குனர்: கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு

பிரபல தமிழ் இயக்குனர் சுசீந்திரன் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அவருடைய கைகள் முறிவடைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் சுசீந்திரன் வழக்கம்போல் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஒரு வாகனம் திடீரென மோதியுள்ளது. இந்த விபத்தினால் கை எலும்பு முறிந்தால் இயக்குனர் சுசீந்தரனை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவரது கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் மூன்று வார முழு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது இயக்குனர் சுசீந்திரனுக்கு ஏற்பட்ட விபத்தால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டியநாடு, பாயும் புலி, ஜீனியஸ், கென்னடி கிளப் உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவான சாம்பியன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

Exit mobile version