Vignesh Shivan: புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’ ஹோட்டலை விலைக்கு வாங்க பேரம் பேசி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
தமிழக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக புதுவை மாநிலத்தில் இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் நேற்று, இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’ ஹோட்டலை வாங்க முடிவு செய்து இருக்கிறார்.
அதற்காக புதுச்சேரி மாநிலம் சட்டசபை வளாகத்தில் சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து ‘சீகல்ஸ்’ ஹோட்டலை வாங்க பேரம் பேசி இருக்கிறார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலாத்துறை அமைச்சர். ‘சீகல்ஸ்’ ஹோட்டல் அரசுக்கு சொந்தமானது என்று தெரிவித்து இருக்கிறார்.
இதனால் ‘சீகல்ஸ்’ ஹோட்டலை ஒப்பந்த அடிப்படையில் ஆவது வாடகைக்கு கொடுக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்க. இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் அமைச்சர். புதுவை மாநிலத்தில் உள்ள பல கடற்கரைகள் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கான டெண்டர் கடந்த 2017 ஆம் ஆண்டு விடப்பட்டு இருக்கிறது.
எனவே புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையத்தை கலை நிகழ்ச்சி நடத்திக் கொள்ள விக்னேஷ் சிவனிடம் அனுமதி கொடுத்து இருக்கிறார் அமைச்சர். புதுவை துறைமுகத்தில் இருக்கும் பொழுதுபோக்கு மையாதில் ஒரே நேரத்தில் சுமார் 4000 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.