கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்!

0
99
#image_title

கஷ்டத்தில் இருந்த இயக்குநர் – வெறும் 1 ரூபாய் அட்வான்ஸ் வாங்கி படம் நடித்து கொடுத்த எம்.ஜி.ஆர்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார்.

எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்தார். இதன் பின்பு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நடிக்க நடித்த அவர் தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும்போது நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார்.

அந்தக் காலத்தில் சில இயக்குனர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனராகவே இருப்பார்கள். சிவாஜியை வைத்து கர்ணன், பலே பாண்டியா, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு.

இவர் எடுத்த சில படங்கள் சரியாக ஓடாததால் நஷ்டம் அடைந்தார். இதன் பிறகு எம்.ஜி.ஆரிடம் சென்று பேசி, அவரை வைத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்தார்.

அவர் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., பி.ஆர்.பந்துலுவிற்காக  படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். கதையை பந்துலு பேச தொடங்கியபோது, அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு எவ்வளவு அட்வான்ஸ் கொடுப்பீங்க என்று கேட்டார். அதைக் கேட்டதும் பந்துலு பதறிப்போனார். ஏனெனில் அவர் பணம் எதையும் எடுத்து செல்லவில்லையாம்.

உடனே, பந்துலுவுடன் சென்றிருந்த வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் உடனே வெளியே போய் பந்துலுவின் கார் ஒட்டுனரிடம் ஒரு ரூபாயை வாங்கி வந்து பந்துலுவிடம் கொடுத்தாராம். அதை எம்.ஜி.ஆரிடம் பந்துலு கொடுக்க, அந்த 1 ரூபாயை மகிழ்ச்சியோடு எம்.ஜி.ஆர் வாங்கி கொண்டாராம்.

அந்தப் படம் தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.