Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைல்ஸ் பாதிப்பை இல்லாமல் ஆக்கும் முடக்கத்தான்!! இந்த முறையில் பயன்படுத்தி 100% பலனை பெறுங்கள்!!

disable-the-piles-without-damage-use-this-method-and-get-100-benefit

disable-the-piles-without-damage-use-this-method-and-get-100-benefit

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்,பழங்களை சாப்பிடுகின்றோம்.ஆனால் சிலர் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கும் கீரைகளை ஒதுக்கிவிடுகின்றனர்.அதிலும் கசப்பு நிறைந்த கீரைகளை முற்றிலும் தவிர்க்கின்றனர்.

முடக்கத்தான் கீரை அதிக மருத்துவ குணம் கொண்ட கீரையாகும்.வேலி ஓரங்களில் வளரும் இவை கொடி வகையாகும்.இந்த கீரையில் முடக்கத்தான் கீரையில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,புரதம்,மெக்னீசியம் உள்ளிட்ட ஏரளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கும்.

மூடாகத்தான் கீரையில் தோசை,சூப்,முடக்கத்தான் சட்னி,முடக்கத்தான் இட்லி என்று பல வகைகளில் செய்து உண்ணப்படுகிறது.அந்த வகையில் பைல்ஸ் பாதிப்பை சரி செய்யும் முடக்கத்தான் சூப் செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி அளவு
2)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:

1.ஒரு கையளவு முடக்கத்தான் கீரையை தண்ணீரில் போட்டு அலசி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை பொடிப் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் அடுப்பில் வாணலி வைத்து விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து நறுக்கி வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.

4.முடக்கத்தான் கீரை நன்கு வதங்கி வந்ததும் இடித்து வைத்துள்ள சீரகத்தை கொட்டி வதக்க வேண்டும்.

5.பிறகு அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி முடக்கத்தான் கீரையை நன்றாக வேக வைக்க வேண்டும்.

6.அதன் பிறகு முடக்கத்தான் கீரையில் உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

7.இந்த முடக்கத்தான் பானத்தை ஆறவைத்து வடிகட்டி பருகி வந்தால் ஆசனவாயை சுற்றியுள்ள புண்கள் ஆறும்.தொடர்ந்து முடக்கத்தான் கீரை பானத்தை பருகி வந்தால் ஆசனவாய் அரிப்பில் இருந்து விடுதலை கிடைத்துவிடும்.முடக்கத்தான் கீரை பைல்ஸ் பாதிப்பை குணப்படுத்தும் சிறந்த மருந்து என்பதால் இதை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

Exit mobile version