கடந்த ஜூலை மாதத்தின் போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்களுடைய ரெகுலரான ரீசார்ஜ் பேக்கில் இருந்து விலையை உயர்த்தினர். ரீசார்ஜ் வேலிடிடியில் எந்தவித மாற்றமும் இன்றி விலையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்தனர்.
இந்த வெளியேற்றத்தினை பற்றி கூறும் டெலிகாம் ஆபரேட்டர்கள், சேவைகள் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த தொழில்துறையில் இது போன்ற கட்டண உயர்வு அவசியம் என்றனர்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திய காரணத்தால், மக்கள் பெரிதும் பிஎஸ்என்எல் பயன்படுத்த மாறி விட்டனர். எனினும் இந்நிறுவனங்கள் தங்களுடைய கட்டணத்தை குறைக்கவோ அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவோ முன்வரவில்லை.
இந்நிலையில், இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கமானது (Cellular Operators Association of India – COAI) இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மீது விதிக்கப்படும் குறைக்க அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மீண்டும் தங்களது பழைய பிளான்களுக்கே மாறிவிடுவோம் என்றும் இந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 5 சதவிகித நெட்வொர்க் பொறுப்பு கட்டணத்தோடு சேர்த்து மொத்த வருவாயில் 8 சதவிகித உரிமை கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.இந்த உரிமக் கட்டணத்தை 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறைக்கும்படியான, திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பை சிஓஏஐ பரிந்துரைக்கிறது.
இவ்வாறு உரிமை கட்டணம் குறைக்கப்பட்டால் இந்நிறுவனங்கள் பழைய பிளான்களுக்கு வருவதுடன், மேலும் தங்களது , தொலை தொடர்பை மேம்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்.