நாக சைத்தன்யா, சோபிதா துலிபாலா இருவருக்கும் டிசம்பர் 4,2024 திருமணம் நடந்து முடிந்தது. இப்பொழுது சோசியல் மீடியா ஸ்டாராக இருக்கும் நிலையில் சோபிதா தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த சோகத்தை பகிர்ந்து உள்ளார்.
நாகர்ஜுனா குடும்பத்தை சேர்ந்த இவர் குண்டூர் மாவட்டத்தில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்தார். சோபிதாவிற்கு மாடலிங் துறையில் ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் ஆர்வம் மிகுந்தவர். இவர் எச்.ஆர் பிசினஸ் மற்றும் எக்கனாமிக்ஸ் படிப்பை மும்பையில் முடித்தார். நடனத்தில் மீது இருந்த ஆர்வத்தினால் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியும் இவருக்கு அத்துப்படி.
2010 ஆம் ஆண்டு கடற்படை அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதுவே இவர் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை தூண்டியது. ‘ ராமன் ராகவ் 2.0’ படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். குறிப்பாக மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடத்தி இருந்திருப்பார். பல வெப் சீரிஸ்களிலும் நடத்துள்ளார்.
நடிகையாகும் முன்பு இவர் மாடலிங் ஆடிஷனுக்கு போயிருந்த போது, கேமரா ரிப்பேர் ஆகிவிட்டது நாளை வாருங்கள் என்று அனுப்பிவிட்டு அவர் நடிக்கவிருந்த இடத்தில் ஒரு நாயை நடிக்க வைத்திருப்பார்கள். இதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நடிகையாக மாறிய பிறகு அதே விளம்பரத்துக்கு ஐஸ்வர்யா ராய் உடன் நடித்துள்ளதாகவும் சொன்னார். எனினும் அப்போது ஏற்பட்ட அவமானத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.