Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதானி குழுமத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி! கேரள உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கவும் அதை குத்தகைக்கு எடுக்கவும் ஏலம் விடப்பட்டுள்ளது. அப்போது ஏலத்தில் அதானி குழுமத்திற்கு குத்தகை கிடைத்துள்ளது. 

திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகையை அதானி குழும நிறுவனம் எடுப்பதாக ஒப்பந்தம் பதிவாகியுள்ளது. ஆனால் அதே குத்தகை எடுக்கும் ஏலத்தில் கேரள அரசும் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது அதானி குழுமத்திற்கு குத்தகை கொடுத்ததை எதிர்த்து கேரள அரசு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கேரள உயர்நீதிமன்றம் அதானி குழுமத்திற்க்கு எதிரான இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Exit mobile version