Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த வகையில் உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

மணிப்பூரில் இரண்டு கட்டமாக தேர்தலுக்கான வாக்குபதிவு நடத்தப்பட்டது. அதில் முதல்கட்ட வாக்குபதிவு கடந்த பிப்ரவரி 28-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குபதிவு மார்ச் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை ஏழு கட்டங்களாக வாக்குபதிவு நடத்தப்பட்டது.

அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 14-ந் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும்,   பிப்ரவரி 20-ந் தேதி மூன்றாவது கட்ட வாக்குபதிவும், பிப்ரவரி 23-ந் தேதி நான்காவது கட்ட வாக்குபதிவும், பிப்ரவரி 27-ந் தேதி ஐந்தாவது கட்ட வாக்குபதிவும், மார்ச் 6-ந் தேதி ஆறாவது கட்ட வாக்குபதிவும் மற்றும் நேற்று முன்தினம் (மார்ச் 7) ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து ஐந்து மாநில தேர்தலிலும் பதிவான வாக்குகள் நாளை (மார்ச் 10-ந் தேதி) எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பே ‘விவிபேடுகளை’ சரிபார்க்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி, நாளை மறுதினம் (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தற்போது முறையிடுகிறீர்களே என கேள்வி எழுப்பிய நிலையில், மனுவை நாளை (இன்று) விசாரிக்கிறோம் என தெரிவித்தார்.

Exit mobile version