Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கறார் காட்டிய அதிமுக! டென்ஷனில் தேமுதிமுக!

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தங்களை தாமதமாக வைத்ததாக தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அந்த வாய்ப்பை கை நழுவி விட்டுவிடக்கூடாது என்ற நிலையில், எல் .கே. சுதீஷ் இருந்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை முடித்துக்கொண்ட கையுடன் பாஜகவோடு அதிமுகவின் தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. இதற்குப் பிறகு தேமுதிக, அதிமுக தலைமை கூட்டணி பேச்சுக்கு அழைத்து தொடர்பு கொண்டது. ஆனாலும் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நபராக இருந்து வரும் என்று சுதீஷ் சென்னையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே சனிக்கிழமை அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இயலவில்லை. இதன் காரணமாக, அதிமுகவின் தலைமையிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டும் பிரேமலதா விஜயகாந்த் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. வழக்கம்போல 234 இடங்களில் தனித்து நிற்கப் போகின்றோம் என்ற விதத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

இருந்தாலும் பிரேமலதாவின் இந்த பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைச்சர்கள் தங்கமணி, எஸ். பி. வேலுமணி போன்றோர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து இருக்கிறார்கள் இதன் பிறகு தேமுதிக மற்றும் அதிமுகவின் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றனர் இருந்தாலும் விஜயகாந்திடம் கூட்டணி குறித்து அமைச்சர்கள் எதுவும் உரையாற்றவில்லை எனவும், கூட்டணியை உறுதி படுத்தி விட்டு தான் சென்றார்கள் என்றும் சொல்லப்பட்டது. வழக்கமாக திரைமறைவில் பேச்சுவார்த்தை முடித்து விட்டு அதன் பிறகு நேரடியாக போவது தேமுதிகவின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த விதத்தில் எத்தனை தொகுதிகள் என்று தேமுதிகவின் தலைமை பேச்சுவார்த்தையை ஆரம்பித்த சமயத்தில் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அதிமுகவின் தரப்பில் பதில் தரப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.

அதோடு அதிமுக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த பின்னரும் கூட சுதீஷ் தன்னுடைய வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்து சென்னை வரவில்லை இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் பிரேமலதா உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தது தான் என்று தெரிவிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து முன்னாள் சட்ட சபை உறுப்பினரும் தேமுதிகவின் மாநில துணை செயலாளருமான பார்த்தசாரதி தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமைச்சர் தங்கமணி இல்லத்திற்குச் சென்று அவர்களிடம் அதிமுக சார்பில் இருந்து தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதாவது இம்முறை தேமுதிகவிற்கு 11 தொகுதிகளை கடந்து ஒரு தொகுதி கூட தர இயலாது என்று தெரிவித்திருக்கிறது. இதனை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த தேமுதிக இதனை அமைச்சர்கள் தெரிவித்த சமயத்தில் அதனை கேட்டு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு எங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சிக்கு கொடுக்கும் தொகுதிகளுக்கு இணையான தொகுதிகள் கொடுக்க வேண்டும் எனவும் தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2019 ஆம் வருடம் முதல் இரண்டு வருடங்களாக திமுக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதை சுட்டிக்காட்டி தெரிவித்திருக்கிறார்கள் அதோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டது இராமதாஸ் பிரச்சாரம் மேற்கொள்ளாத எதையும் அவர்கள் எடுத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இருந்தாலும் விஜயகாந்தின் தேமுதிகவிற்கு ஒன்பது இடங்களை தாண்டி எங்களால் 11 இடங்கள் மட்டுமே ஒரு கை இயலும் எனவும் கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை தாராளம் காட்ட இயலாது எனவும், அதிமுக பிடிவாதமாக தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக, முதல்கட்ட பேச்சுவார்த்தை எந்தவித நல்ல முடிவும் எடுக்கப்படாமல் முடிவுற்று இருக்கிறது. பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவிற்கு வெறும் 11 தொகுதிகள் என்று அதிமுக தெரிவித்ததை பிரேமலதா கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் பிரேமலதா என்ன முடிவு வேண்டுமானாலும் எடுப்பார் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் எல்.கே. சுதீஷ் தற்சமயம் இருக்கின்ற சூழ்நிலையில், சில சட்டசபை உறுப்பினர்களை பெற வேண்டிய அவசியம் என்று நினைக்கின்றார்.

ஆகவே சென்ற தேர்தலை போல அவசரப்பட்டு பிரேமலதா எதாவது ஒரு முடிவை எடுத்துவிட்டால் கட்சி மோசமாகிவிடும் என்று சுதீஷ் கவலையில் இருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன.

Exit mobile version