ஒரு கிளாஸ் நீரில் இந்த இரண்டு பொருட்களை கரைத்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்!!
வெயில் காலத்தில் வயிற்று கடுப்பு ஏற்படுவது சாதாரண ஒன்று தான்.உடல் அதிகளவு சூடாகும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படும்.
வயிற்று கடுப்பு பாதிப்பு வராமல் இருக்க காரமான உணவு,எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடிய பொருட்களை சாப்பிடுவது நல்லது.ஒருவேளை வயிற்று கடுப்பு ஏற்பட்டால் அதை இரண்டு பொருட்கள் மூலம் எளிதாக குணப்படுத்திக் கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்:-
1)புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
2)வெல்லம் – ஒரு துண்டு
3)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சம் பழ அளவு புளி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பிறகு ஒரு துண்டு வெல்லத்தை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.அரை மணி நேரத்திற்கு பிறகு ஊறவைத்த புளி கரைசலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.
பின்னர் அதில் ஒரு கிளாஸ் நீர் ஊற்றி கலக்கவும்.புளி கசடு இல்லாதவாறு வடிகட்டி கொள்வது நல்லது.
பிறகு இடித்த வெல்லத் தூளை புளி தண்ணீரில் போட்டு கலக்கவும்.வெல்லத் தூள் கரையும் அளவிற்கு கலந்து குடிக்கவும்.
இந்த பானத்தை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும்.அப்பொழுது தான் வயிற்று கடுப்பு முழுமையாக குணமாகும்.