Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விநியோகஸ்தர்கள் நஷ்டம் ஏற்படும் எனப் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

தமிழக திரையரங்குகள் மூலம் முதல் நாள் வசூலாக 16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இது வழக்கமாக ரஜினி படங்களின் வசூலை விட மிகக்குறைவு என சொல்லப்படுகிறது. ஒருவேளை பொங்கல் விடுமுறை ஆரம்பித்ததும் வசூல் அதிகமாகும் எனத் தெரிகிறது.

Exit mobile version