Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

11ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழக கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் இருக்கின்ற பிரபலமான கோவில்களில் வருடம் தோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு மக்கள் அந்த திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அந்த திருவிழா தினத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது.

அந்த விதத்தில் தென் தமிழகத்தில் இருக்கின்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயமும் ஒன்று. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலமும் இது என்று சொல்லப்படுகிறது.

1000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி பெரும் திருவிழா மிகவும் கோலாகலமான முறையில் நடைபெறும் ஆனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டமும் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 வருடங்களாக ஆனி தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் ஞாயிற்றுக்கிழமை ஆனி பெரும்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழாவின் உச்ச நிகழ்வாக தேரோட்டம் இந்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து வரும் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும், பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொது தேர்வுகள் எதுவும் இருக்குமானால் அவர்களுக்கு தேர்வு நடைபெறும். ஆகவே அது போன்ற பள்ளிகள் மற்றும் பொது தேர்வு தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு கட்டும் விதத்தில் வரும் 23ஆம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version