Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு மட்டும் இலவச தையல் இயந்திரம்.. அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே அப்பளை பண்ணுங்க!!

District Collector's stunning announcement! Program for providing sewing machine for differently abled!!

District Collector's stunning announcement! Program for providing sewing machine for differently abled!!

நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்  பெறுவதற்கு 19.08.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களையும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

அதாவது விண்ணப்பதாரரின் வயது 18 இலிருந்து 60 வரையிருக்க வேண்டும். ஏற்கனவே தையல் பயிற்சி கற்றிருப்பதற்கான சான்றிதழ்,  UDID அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கென கொடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களைப் பெற்றிருத்தல் அவசியம்.

மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், கால்கள் பாதிப்படைந்திருக்கும் போதிலும் இரு கைகளும் நன்றாக இருக்கப் பெற்றவர்கள் , 75% -க்கும் அதிகமாக மனவளர்ச்சி குன்றியுள்ள தாய்மார்கள் போன்ற வகையிலான மாற்றுத் திறனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பெரும் பயனை அடையக் கூடும்.

இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற அதிகாரப் பூர்வ இ-சேவை மையத்தின் வலைத்தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த இணையப் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் அவரவர்களுடைய விவரங்கள் சரியாக உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். சென்னையின் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்களின் அறிவுறுத்தலின் படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Exit mobile version