வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

0
183
#image_title

நாமக்கல்லில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு பதாகை உடன் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அதன் தலைவர் சாரதா ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் செந்தில்குமார் உடன் பங்கேற்றார். கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்களில் 10 பேர் வந்திருந்தனர்.

இதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்னதாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதனை வலியுறுத்தி இரண்டு பதாகைகளுடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாமகவை சேர்ந்த வடிவேலன் திடீரென கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாமகவை சேர்ந்த வடிவேலன் கூறுகையில் மூன்று மாதத்திற்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கல்வியில் இட ஒதுக்கீடு நிறைவேற்றாவிட்டால், தன்னுடைய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்தார்.