Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்த 1225 கிராமங்கள் சென்னை பெருநகர பகுதியில் இணைக்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ,கும்மிடிப்பூண்டி ,ஊத்துக்கோட்டை ,திருத்தணி ,பூந்தமல்லி தாலுக்கக்களைச் சேர்ந்த 550கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.மேலும் ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் இருந்து 44கிராமங்களும் ,காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம் ,வாலாஜாபாத் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுக்காவில் இருந்து 335கிராமங்கள் சேர்க்கப்படுகின்றன.

அதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு ,திருப்போரூர் ,திருக்கழுக்குன்றம் மற்றும் வண்டலூர் தாலுகாக்களைச் சேர்ந்த 296கிராமங்களும் சென்னை பெருநகர பகுதிகளில் இணைக்கப்படுக்கிறது.அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version