Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அதோடு இன்றைய தினம் நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது, ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

இவை தவிர்த்து தமிழ்நாட்டின் வட கடல் ஓரத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

Exit mobile version