Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விதை சட்டத்தின் விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து…மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை!!

விதை விற்பனையாளர்கள் விதைசட்டத்தின் விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை இருப்பு குடோன்களில், மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் மல்லிகா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரகங்களான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி மற்றும் சாவித்திரி ஆகிய விதை குவியல்களில் இருந்து விதை மாதிரிகள் எடுத்து விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

மேலும், விதைகள் சட்டத்தை மீறி செயல்பட்ட காரணத்திற்காக தனியார் விதை விற்பனை குடோன்களில் இருந்த 2.5 டன் வீரிய மக்கசோளம் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

மேலும், அனைத்து விதை விற்பனையாளர்களும் விதைச்சட்டதின்படி விதை இருப்பு விவர பலகை, விலை பட்டியல், கொள்முதல் பட்டியல், விதை இருப்பு பதிவேடு மற்றும் மற்ற மாநில விதைகளுக்கான படிவம் 2 ஆகியவை பராமரிக்க அறிவறுத்தப்பட்டது.

இந்த விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து செய்யப்பட்டு நிதீமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version