சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி!
அதிமுகவில் தற்போது ஒற்றைய தலைமை விவகாரத்தால் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் யார் பக்கம் நிற்பது என்று அறியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாள்பட நாள்பட கிடைக்கும் மரியாதையும் குறைந்து வருவதாக பல புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகியான சேகர் என்பவர் முன்னாள் மாவட்ட பிரதிநிதியாகவும், முன்னாள் நகர கவுன்சிலர் ஆகவும், கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பதவி வகித்து வந்த நிலையில் தற்பொழுது அவர் கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.
இவர் எம்ஜிஆர் காலகட்டத்தில் இருந்தே அதிமுகவின் வெற்றிக்காக போராடி சிறைக்குச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரத்தால் இரு அணிகளாக பிரிந்த நிலையில் அந்தந்த அணி தலைவர்கள் அவர்கள் பக்கம் இருக்கும் நிர்வாகிகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணி அமர்த்தி வரும் பட்சத்தில் சீர்காழியில் நான்காவது வார்டு கிட்டத்தட்ட 20 வருடமாக அதிமுக ஆட்சியாக இருந்தபோது தற்பொழுது இந்த வேறுபாட்டால் அதிமுக தோற்று உள்ளது.
மேலும் தற்பொழுது அமர்த்தபட்ட நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளை சிறிதும் கூட மதிப்பதில்லை என்று வருத்தத்துடன் கூறினார். மேலும் கட்சியானது சீரற்று காணப்படும் நிலையில் மூத்த நிர்வாகிகளிடம் சிறிதும் கூட ஆலோசனை செய்யாமல் தற்பொழுது உள்ளவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விருப்பமுள்ள நபர்களுக்கு பதவி கொடுத்து வருவதால் தங்களைப் போன்ற மூத்த நிர்வாகிகளை அவர்கள் மதிப்பதில்லை.
இவ்வாறு பதவி அமர்த்தப்படுவதால் இவர்கள் நாளடைவில் தொண்டர்களை கூட மதிக்காமல் போகும் சூழல் உண்டாகிறது. எனவே நான் கட்சியை விட்டு விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து அவர் சீர்காழியில் உள்ள எம்ஜிஆர் சிலையிடம் பதவி விட்டு விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.