வடகொரியா: தொடர்ந்து விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில் அவர் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
இந்தியாவில் தற்போது திருமண தம்பதிகளில் விவாகரத்து என்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது. அது தற்போது ஒரு பேஷனாக மாறிவிட்டது. அதுவும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்கள் தான் இதனை அதிகம் செய்கின்றனர். சமீபத்தில் இந்தியாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தொடர்ந்து விவாகரத்து செய்து வருகின்றனர்.இந்நிலையில் தான் வடகொரிய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
கொடூரமான சட்டங்கள் நிறைவேற்றுவது என்றால் அதில் நிச்சயம் வடகொரியா இருக்கும். அப்படி பட்ட சட்டங்களை மீறுவோருக்கு மோசமான கொடூர தண்டனை கிடைக்கும். இப்படி இருக்கும் நிலையில் தான் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது வடகொரிய அரசு. இதில் விவாகரத்து செய்கின்ற தம்பதிகள் இருவரும் 6 மாத காலம் தொழிலாளர் முகாம்களில் வேலை பார்க்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக விவாகரத்து விண்ணப்பிக்கும் பெண்களுக்கு அதை விட நீண்ட தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. இது போன்ற திருமணம் செய்த இருவர் இடையில் அந்த உறவை முறித்துக் கொள்வது அந்நாட்டு சொலிச முறைகளுக்கு எதிரானது. எனவே இதனை மாறாமல் பாதுகாக்க கடுமையாக உள்ள தண்டனைகள் வழங்கினால் மட்டுமே விவாகரத்துக்கள் குறையும் என்று இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிலாளர் முகாம்களில் கடுமையான வேலைகள் வழங்கப்படும், தேவையான உணவு கிடைக்காது என கூறப்படுகிறது.