தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற சினிமாவிலும் தற்போது சமீப காலமாக இந்த விவாகரத்து விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாகரத்து ஷாம் டிவோர்ஸ் என்று அழைக்கப்பட்டு தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முதலில் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி சுமுகமாக பேசி நாங்கள் திருமண வாழ்வில் பிரிந்து வாழ போவதாக கூறியதைத் தொடர்ந்து பல திரைத்துறை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகின்றனர்.இவரை தொடர்ந்து நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதியினர் பிரிந்தனர்.
அவரை தொடர்ந்து முன்னணி நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியிருந்தார். தற்போது ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான்-சாய்ரா பானு பிரிவதாக அறிவித்துள்ளது
சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது sham divorce என்ற என்ற வார்த்தை ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதற்கான விளக்கம் கணவன் மனைவி இணைந்து இருக்கும்போது அவர்களின் வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு வருடா வருடம் பலகோடி வரி செலுத்த வேண்டும். இதுபோன்று சட்ட ரீதியாக பிரிவதனால் இரண்டு பேர் செலுத்தும் வரி குறையும். இவர்கள் சட்ட ரீதியாக பிரிந்தாலும் தொடர்ந்து இணைந்து வாழும் முறை உள்ளது எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த வித பழக்கம் தவறானதுதான். ஆனால் இந்திய முறையில் இதற்கு சட்டம் கிடையாது. இந்தியாவில் இரண்டு பேர் இணைந்து வாழ்வது சட்ட ரீதியான குற்றம் கிடையாது. இது விவாகரத்துக்கு பின் தவறு இல்லை இதுவே ஷாம் விவாகரத்து என சொல்லப்படுகிறது.