சீனாவில் ஷுஹாய் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் மாலை நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதே போல் திங்கட்கிழமை மாலை மக்கள் அனைவரும் அந்த மைதானத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். இரவு 8 மணியளவில் மைதானத்தில் புகுந்த கார் மக்கள் மீது மோதியது.
இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 43 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 62 வயது ஆன முதியவர் தான் இந்த மோசமான சம்பவத்தை செய்துள்ளார். இதை செய்து பின்னர் அவரும் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் அந்த முதியவருக்கு மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டுள்ளது விரக்தியில் இருந்துள்ளார். மேலும் சொத்துக்களை பகிர்வதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மக்கள் கூட்டத்தில் புகுந்து காரை வைத்து பொதுமக்கள் மீது மோதியுள்ளார்.இதை தொடர்ந்து அவரை காவல் துறை கைது செய்தது.