இந்தியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை விளங்கி வருகிறது. இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் போன்றே நியூயார்க் சிட்டியிலும் தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகரமான நியூயார்க்கில் அதிக அளவில் இந்தியர்கள் வாழ்வதால் அங்குள்ள பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகை அன்று விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை என்று நியூயார்க் சிட்டியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வழக்கம் போல் தீபாவளி பண்டிகை என்று நியூவாக் சிட்டியில் உள்ள பள்ளிகளில் படிக்கக்கூடிய 11 லட்சம் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம், தீபாவளியைக் குறிக்கும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்தில் நேற்று ஒளிர்ந்தது. இதற்கான முயற்சிகளை, நியூயார்க் வாழ் இந்தியர் சங்க கூட்டமைப்பு மேற்கொண்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் மட்டும் இன்றி நியூயார்க் நகரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.