Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

#image_title

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு இரயில்களை இடக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் ஏற்கனவே அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், செங்கோட்டை, கோவை ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 300ஐ தாண்டி உள்ளது. இதனால் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் “தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து மக்களின் வசதிக்காக கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த 6 சிறப்பு ரயில்களில் திருநெல்வேலி, நாகர்கோவில் வழிநடத்தில் 4 ரயில்களும், கோவை வழித்தடத்தில் இரண்டு சிறப்பு ரயில்களும் என்று மொத்தமாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் இறுதியில் அதாவது அக்டோபர் மாதம் இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இந்த வசதி மட்டுமில்லாமல் முக்கியமான விரைவு ரயில்களில் இரண்டு முதல் மூன்று பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

Exit mobile version