நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!

0
103
#image_title

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம செய்வதற்கு இன்று(அக்டோபர்11) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. அது மட்டுமில்லாமல் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் அதாவது அக்டோபர் 11ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று(அக்டோபர்11) முன்பதிவு தொடங்கி இருக்கின்றது.

பொதுவாக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கான முன்பதிவு 30 நாட்களுக்கு முன்னரே தொடங்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் 10ம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் நபர்கள் அனைவரும் இன்று(அக்டோபர்11) முதல் தங்களுடைய இருக்கைகளை முன்பதிவு செய்யலாம்.

அதே போல நவம்பர் 11ம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு முன்பதிவு நாளை(அக்டோபர்12) தொடங்குகின்றது. எனவே அக்டோபர் 12ம் தேதி முதல் பயணம் செய்ய விரும்பும் மக்கள் அனைவரும் நவம்பர் 11ம் தேதிக்கான இருக்கைகளை முன்பதிவு செய்யத் தொடங்கலாம்.

முன்பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் பயணிகள் அனைவரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். அல்லது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலியான tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் பயணிகள் பேருந்து நிலையங்களில் இருக்கும் முன்பதிவு நிலையங்களிலும் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.